உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாம்பு பிடி வீரரின் குடும்பத்துக்கு உதவி

பாம்பு பிடி வீரரின் குடும்பத்துக்கு உதவி

திருப்பூர்; கோவையில் பாம்பு பிடிக்கும் போது கடிபட்டு இறந்த பாம்பு பிடி வீரர் குடும்பத்துக்கு, திருப்பூர் சமூக சேவை அமைப்பினர் நிதி உதவி அளித்தனர்.கோவையை சேர்ந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ், 30. சமீபத்தில் பாம்பு பிடிக்கும் போது, பாம்பு கடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபமாக இறந்தார்.இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தது. இதையறிந்த திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில், 40 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை, அவரின் மனைவியிடம் வழங்கினர்.இதுதவிர, இந்த அமைப்பு சார்பில், திருப்பூர் இடுவாய் சின்னாண்டிபாளையம், சீரானம்பாளையம் அரசு துவக்கப்பள்ளிக்கு பீரோ ஒன்றையும் நன்கொடையாக அளித்தனர். இவ்விரு நிகழ்ச்சியில், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ