உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹெராயின் கடத்தல்; வாலிபர்கள் கைது

ஹெராயின் கடத்தல்; வாலிபர்கள் கைது

திருப்பூர்; கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து, பீஹார் வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.திருப்பூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தனிப்படைபோலீசார் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் வந்தகேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில், சந்தேகப்படும் விதமான, இருவரிடம் விசாரித்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்த விகாஷ்குமார், 21, அபிஷேக்குமார், 24 என்பதும், விகாஷ்குமாரிடம் 3.6 கிராம் ஹெராயின் இருந்ததும் தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, இருவரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி