உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுக்கடை அகற்றம் குறித்து முடிவெடுக்க ஐகோர்ட் கெடு

மதுக்கடை அகற்றம் குறித்து முடிவெடுக்க ஐகோர்ட் கெடு

திருப்பூர் : காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் ரோட்டில் அங்கன்வாடி, ரேஷன் கடை, நுாலகம், வாரச் சந்தை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியன உள்ளன.இவற்றுக்கு வந்து செல்லும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இதனருகே, பெரும் இடையூறாகவும், விதிகளுக்குப் புறம்பாகவும் டாஸ்மாக் மதுக்கடை (கடை எண் 2347) செயல்பட்டு வருகிறது.இதை இடம் மாற்றம் செய்யக் கோரி கடந்தாண்டு, காங்கயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரகோபால் என்பவர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர்; திருப்பூர் கலெக்டர் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு மனு அளித்தார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாதக்கணக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், டாஸ்மாக் நிர்வாகம் மெத்தனமாக இருந்தது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கை அவர் தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.வழக்குதாரர் அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்து, அந்த மதுக்கடை அகற்றுவது குறித்து 15 நாளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகத்துக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி