மேலும் செய்திகள்
கும்மிருட்டு சாலை; விபத்து அபாயம்
25-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 34வது வார்டு பகுதியில் மணியகாரம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. காங்கயம் ரோட்டையும், ஊத்துக்குளி ரோட்டையும் இணைக்கும் வகையிலான ரோடாக இந்த ரோடு அமைந்துள்ளது. மாநகராட்சி சார்பில் தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகளில் கம்பம் மட்டுமே காணப்படுகிறது. அதன் உச்சியில் விளக்குகள் தாங்கி நிற்கும் பகுதி, கம்பத்தின் பாதியில் தொங்கியபடி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவற்றிலும் விளக்குகள் இல்லை. வெறுமென அதன் கம்பிகள் மட்டுமே காணப்படுகிறது. லட்சக்கணக்கில் நிதியை செலவிட்டு அமைக்கப்படும் தெரு விளக்குகள் பொதுமக்களுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அவை வெறும் காட்சிப் பொருளாகத் தான் காணப்படுகிறது. உடைந்து சேதமடைந்து ஊசலாடும் மின் விளக்குகள் சரி செய்து, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் சரி செய்ய வேண்டும்.
25-Oct-2025