உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு 

ரோடு விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு 

உடுமலை, ; தளி - குமரலிங்கம் ரோடு விரிவாக்கப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுபாடு கோட்டப்பொறியாளர் தலைமையில்,அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்குட்பட்டதுதளி - குமரலிங்கம் ரோடு. இந்த சாலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2023 - 24ன் கீழ் இடைவழித்தடத்திலிருந்து, இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறு பாலங்கள் திரும்ப கட்டுதல் பணிகள் நடக்கிறது.இப்பணிகளுக்கு, ரூ.3.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுபாடு கோட்டப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.ஆய்வில் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுபாடு குழுவினர் மற்றும் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் மகேந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ