உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடிக்கம்பங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

கொடிக்கம்பங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

திருப்பூர் : கோர்ட் உத்தரவிட்டபடி பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று மேற்கொண்டனர்.அனைத்து பகுதிகளிலும் உள்ள புறம்போக்கு இடங்கள், அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், கொடிக்கம்ப மேடைகள் ஆகியவற்றை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.அவற்றை அகற்றி கொள்ள அறிவுறுத்தி, கால அவகாசம் வழங்கவும், குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்றப்படாத கம்பங்களை உரிய துறை மூலமாக அகற்றி அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது.அதன்படி, திருப்பூர் பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அண்மையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அதேபோல் நெடுஞ்சாலைத்துறையினரும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை நேற்று துவங்கினர்.முதல் கட்டமாக, பல்லடம் ரோட்டில் ஒரு பகுதியில் கொடிக்கம்பம் அகற்றும் பணி நடந்தது. அடுத்தடுத்து ஒவ்வொரு ரோடாகவும் இப்பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை