உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆலாம்பாளையம் ரோட்டில் சீரமைப்பு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ஆலாம்பாளையம் ரோட்டில் சீரமைப்பு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

உடுமலை: மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மாவட்ட இதர சாலைகளில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய, இதர பிரிவுகளின் கீழ் ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதில், மாவட்ட இதர பிரிவின் கீழ் பராமரிக்கப்படும் ரோடுகள், கிராம போக்குவரத்தில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.இந்த ரோடுகளில், குண்டும், குழியுமாக பகுதிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, உடுமலை-எலையமுத்துார் ரோட்டில் இருந்து பிரிந்து, ஆலாம்பாளையம் வழியாக செல்லும் ரோட்டில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது; குண்டும், குழியுமான பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்படுகிறது. பிற ரோடுகளிலும், பராமரிப்பு பணிகள் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ