உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயோ மெட்ரிக் பதிவுக்கு முகாம் மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

பயோ மெட்ரிக் பதிவுக்கு முகாம் மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை, ; 'மலைவாழ் கிராம மக்கள் ரேஷன்கடைகளில், பயோமெட்ரிக் பதிவு செய்ய சிரமம் இருப்பதால், வனப்பகுதியிலேயே சிறப்பு முகாம் நடத்த வேண்டும்,' என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன.இதில், மாவடப்பு, காட்டுப்பட்டி மலை கிராம மக்களுக்கு, ராவணாபுரம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடை வாயிலாக, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.தளி கூட்டுறவு சங்கத்தின் கீழ், குழிப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, ஜல்லிபட்டி கூட்டுறவு சங்கத்தின் கீழ், ஈசல்திட்டுக்கும், கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, பொருப்பாறு குடியிருப்புகளுக்கு, மானுப்பட்டி கூட்டுறவு சங்கத்தின் கீழ் பொருட்கள் வினியோகிக்கின்றனர்.பகுதி நேர ரேஷன் கடை மற்றும் நடமாடும் ரேஷன் கடை வாயிலாக, ரேஷன் பொருட்கள் சம்பந்தப்பட்ட மலை கிராமங்களுக்கு கொண்டு சென்று, பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், அனைத்து மலை வாழ் கிராம மக்களும், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில், பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வனப்பகுதியில் இருந்து சமவெளியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்கு, மலை கிராம மக்கள் வந்து செல்ல மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது. ஒரே நாளில், முதியவர்கள் உட்பட அனைவரும் மலைப்பாதை வழியாக கீழே வருவது சாத்தியமில்லை.'எனவே, மலைவாழ் கிராமங்களில், சிறப்பு முகாம் நடத்தி, அப்பகுதி மக்களிடம் பயோ மெட்ரிக் பதிவு பெற வேண்டும்,' என தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை