மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி ஆலோசனை
28-Jul-2025
பல்லடம்; பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஹிந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பல்லடம் பகுதி பொறுப்பாளர் யோகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சுதந்திர தினம் மற்றும் அகண்ட பாரத சபதமேற்பு தினத்தை முன்னிட்டு, அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிர்வாகிகள் மயில்சாமி, அங்குராஜ், விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
28-Jul-2025