மேலும் செய்திகள்
திருவள்ளுவர் தின விழா ஜன., 15ல் கோலாகலம்
25-Nov-2024
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கன்னியாகுமரியில் உள்ள, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஓவிய கண்காட்சி சென்னையில் நடந்தது. அதில், மாணவர் ஒருவர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் தீட்டி இருந்தார். கண்காட்சியை பார்வையிட வந்த கல்வி அமைச்சர் மகேஷ், 'அந்த ஓவியத்தை நீக்க கூறியதுடன், இனி இதுபோன்றவற்றை அனுமதிக்க கூடாது' என்றார்.மாணவர்களின் படைப்பு திறனையும், ஆர்வத்தையும், நிறத்தை காரணம் காட்டி முடக்குவது சிறுபிள்ளை தனமான செயல். தி.மு.க.,வின் முயற்சியால் தான் கன்னியாகுமரியில், சிலை வைக்கப்பட்டதாக அமைச்சர் நினைக்கிறார். ஆனால், விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைத்த போது, அதனை நிறுவிய ஏக்நாத் ரானடே திருவள்ளுவருக்கு சிலை அமைப்பது தொடர்பாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசித்தார்.ஆட்சி மாற்றத்துக்கு பின், 1979ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
25-Nov-2024