மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
22-Sep-2025
பல்லடம்; பல்லடத்தில், வார்டு பொறுப்பாளர்களுடனான ஹிந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரஞ்சித் வரவேற்றார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் வார்டு பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கடமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் மேற்கொண்ட பணிகள், புதிதாக சேர்த்த உறுப்பினர்கள், கூட்டங்கள் நடத்தியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
22-Sep-2025