மேலும் செய்திகள்
'தவறிழைத்தோரை தண்டிக்க ஆஞ்சநேயரிடம் வேண்டுதல்'
22-Sep-2024
திருப்பூர்: திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுத்தவர்களை தண்டிக்க வேண்டி ஹிந்து அன்னையர் முன்னணியினர் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுத்தவர்களை தண்டிக்க வேண்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, ஹிந்து அன்னையர் முன்னணியினர், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் முன் நேற்று மாலை சிதறு தேங்காய் உடைத்தனர்.மாவட்ட பொது செயலாளர் நிர்மலா, மாவட்ட தலைவர் சித்ரா, கிழக்கு மாவட்ட செயலாளர் நளினி, செயற்குழு உறுப்பினர் வனிதா, அவிநாசி நகர தலைவர் மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Sep-2024