உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது

திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் செல்வதற்காக கிளம்பிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் அபிராமி அம்மன் புகழ் ஓங்கும் வகையில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு, ஹிந்து முன்னணி சார்பில் வேடசந்துாரில் அபிராமி அம்மன் சிலையை வைத்து சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு நடந்தது. இதை தொடர்ந்து ஒன்றியத்திற்கு இரு இடங்கள் என முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களே பூஜை செய்து வழிபடவும், இதன் தொடர்ச்சியாக ஏப்.,27-ல் திண்டுக்கல்லில் ஆன்மிக மாநாடு நடத்தவும் அதில் மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை நடக்கவிருந்த பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் அங்கு சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் பரமசிவம் தலைமையில் அபிராமி அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த தனியார் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜையை முடித்து வெளியே வந்த இரு வழக்கறிஞர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆத்து மேடு செல்லும் மெயின் ரோட்டில் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். செந்தில்குமார் உள்ளிட்டோரை போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். இவருடன் 10 பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மன், சுவாமி சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், இன்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதே பகுதிக்கு வந்து அபிராமி அம்மன் சிறப்பு பூஜையை துவக்கி கிராமங்களுக்கு எடுத்து செல்வார் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் செந்தில்குமார் கூறியிருந்தார்.இந்நிலையில், வேடசந்தூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக கிளம்பிய காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திருப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் அங்கேயே அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து இந்து முன்னணியினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kanns
மார் 09, 2025 10:02

Overthrow PowerMisusing AntiHindu DMK Rulers& Stooge Officials Teach Lessons to tgem in tge Language they Understand


arumugam mathavan
மார் 09, 2025 00:07

அரசு ஏன் அபிராமி அம்மன் பூஜையை தடுக்கீறீர்கள் ...இது அனைத்து மக்களுமான அரசாக தெரியவில்லை


Kasimani Baskaran
மார் 08, 2025 23:53

இதைப்பார்த்தாவது தீம்க்காவுக்கு ஓட்டுப்போடும் இந்துக்கள் திருந்தவேண்டும் கபட வேடதாரிகளைத்தவிர


நிக்கோல்தாம்சன்
மார் 08, 2025 23:43

மறுநாள் காலை துணை வாயை பிளந்து கொண்டு நின்றதே , கவனிக்கவில்லையா ?


Iniyan
மார் 08, 2025 22:47

சுடலை அவுரங்கசீப் ஆட்சி செய்கிறார். இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நேரம் வந்து விட்டது


PRS
மார் 08, 2025 21:37

அண்ணே, நீங்க ஹிந்து தானே ? ஏன் உப்பிசுக்கு உதவறீங்க? கொஞ்சம் யோசனை பண்ணுங்க.


orange தமிழன்
மார் 08, 2025 21:21

தீயமுகாவிற்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது........


Narayanan Muthu
மார் 08, 2025 19:48

மதத்தை வைத்து கலவரம் செய்ய துடிக்குதுகள். இது ஒன்றும் வடமாநிலம் அல்ல. தமிழகம். இங்கு இவர்களின் கனவு பலிக்காது.


Subramanian N
மார் 08, 2025 21:07

கலவரத்தை தூண்டிவிடுவது ஸ்டாலின் அரசு. திமுகவின் கைக்கூலி சும்மா இரு


Kumar Kumzi
மார் 08, 2025 22:03

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட வரும் காலங்களில் வக்பு வாரியத்துக்கு சொந்தமாகிவிடும் இன்னும் துண்டுசீட்டு கூமுட்டை கோமாளிக்கு முட்டு குடு


Kumar Kumzi
மார் 08, 2025 22:12

ஒனக்கு மட்டும் ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்டை கோமாளி இஸ்பெசலா ஓசிகோட்டர் இப்பிடி முட்டு குடுக்குற


தேவராஜன்
மார் 08, 2025 19:24

நவாஸ் கனி பிரியாணி கொட்டிக்கச் சென்ற போது காவல் துறை எங்கே போனது. திராவிஷ ரவுடிகளுக்கு ஆட்சி பிச்சை போட்ட மதங்களின் அடி வருடிகளாக மாறி விட்டாதா தமிழக காவல்துறை?


S Sivakumar
மார் 08, 2025 19:19

இது தமிழ் நாடா? அல்லது சவுதியின் பகுதியாக அரசியல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் உள்ளதே கேட்பார் யாரும் இல்லையே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை