உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெதப்பம்பட்டி அரசு பள்ளியில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

பெதப்பம்பட்டி அரசு பள்ளியில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

உடுமலை; பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவடைந்தது.பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் 13 நாட்கள் நடந்தது.பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடல் தகுதி மேம்படுத்துதல், அடிப்படை திறன்கள், விளையாட்டு நுணுக்கங்கள், அணி அமைப்பு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.முகாமில் மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. முகாம் நிறைவு விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பாபு தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னாள் ஹாக்கி வீரர்களும் விழாவில் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை