உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊர்க்காவல்படை அறிவிப்பு

ஊர்க்காவல்படை அறிவிப்பு

உடுமலை; திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவியில் பணியாற்ற விண்ணப்பிக்க பின் வரும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி - குறைந்த பட்சம் பட்டப் படிப்பு. வயது 21ல் இருந்து 50க்குள் இருக்க வேண்டும். இது கவுரவப் பதவி என்பதால் ஊதியம் வழங்கப்படாது. சமூகத்தில் நல்ல மதிப்புள்ள, சேவை மனப்பான்மை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன், காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 94981 74526 என்ற எண், gmail.comஎன்கிற இ-மெயில் முகவரியில், தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி