உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புத்தகங்கள் எவ்வளவு தேவை? பாடநுால் கழகம் கேட்கிறது

புத்தகங்கள் எவ்வளவு தேவை? பாடநுால் கழகம் கேட்கிறது

திருப்பூர்; பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு துவங்கியுள்ளது.பத்து மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வருபவர்களுக்கும், தற்போது வரை புதிதாக பள்ளியில் சேர்ந்து வருவோருக்கும் கூடுதல் புத்தகங்கள் இரண்டாம் கட்டமாக தேவையா என மாவட்ட கல்வித்துறை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, பிப்., மாதம் முடிக்கப்பட்டு, ஏப்., முதல் வாரம் மாவட்டம் வாரியாக பட்டியல் தயாரானது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்ட பின், மே முதல் வாரமே மாவட்ட குடோன்களுக்கு பாடநுால் கழகம் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் தாலுகா, பள்ளி வாரியாக பிரிக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன், 2 பள்ளி திறந்த நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.பள்ளி திறந்து நான்கு வாரங்கள் முடிந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மீதமுள்ள புத்தகங்கள், இரண்டாம் கட்டமாக புத்தகங்கள் வேண்டுமா என்பது குறித்து விபரம் சேகரிக்க, பாடநுால் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:பள்ளி திறப்புக்கு முன் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை உத்தேசமாக கணக்கிட்டு கூடுதலான புத்தகங்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான மாவட்ட குடோன்கள் புத்தகங்கள் உபரியாக உள்ளது. பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு நடக்கவுள்ளது.இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வருவோருக்கு கூடுதலாக புத்தகம் தேவையா என்பதை அறிய, இரண்டாம் கட்டமாக புத்தகங்கள் வேண்டுமா என கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அட்மிஷன் நடந்து வருவதால், அதற்கேற்பவும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி