மேலும் செய்திகள்
மகள் சாவில் சந்தேகம்போலீசில் தாய் புகார்
11-Apr-2025
காங்கயம்,; குண்டடத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 63; விவசாயி. இவரது மகள் கவிதா, 36. காங்கயத்தில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்தார்.இவருக்கு முத்துரை சேர்ந்த ஆனந்தன், 43 என்பவருடன் கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எட்டு வயதில் மகன் உள்ளார். தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தன் குடும்பத்துடன் காங்கயம், நத்தக் காடையூர் - வெள்ளியம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த, 26ம் தேதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கவிதாவை தாக்கினார்.மறுநாள் காலையில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் கவிதா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிதாவின் தந்தை புகார் அளித்திருந்தார். காங்கயம் போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதா, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.
11-Apr-2025