உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி கொலை; கணவர் எஸ்கேப்

மனைவி கொலை; கணவர் எஸ்கேப்

திருப்பூர்; பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம் சாகர் மோகியா, 35. இவரது மனைவி ராஜகுமாரி, 32. தம்பதிக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பத்துடன், திருப்பூர் ராயபுரம், விநாயகபுரம் முதல் வீதியில் தங்கியுள்ளனர்.கணவர் பனியன் நிறுவனத்துக்கு வேலை சென்று வருகிறார். கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதால் அன்றாடம் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம், தம்பதியருக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணவர், மனைவியை தாக்கி, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, துாக்கில் தொங்கி இறந்தது போன்று ஜன்னல் கம்பியில் மாட்டி விட்டு தப்பி சென்றார்.திருப்பூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து தப்பிய கணவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி