மேலும் செய்திகள்
நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது
04-Jun-2025
வெள்ளகோவில்; வெள்ளகோவில் அருகே மனைவியை கொன்று, கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 65; இவரது மனைவி சாமியாத்தாள், 60. மகன், மகள் உள்ளனர். மகன் வித்யாசாகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மகன் திருமண விவகாரத்தில் உடன்படாத வேலுசாமி, மனைவியை விட்டு பிரிந்து, கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம், சின்ன தாராபுரத்தில் வசித்து வந்தார். மகன், மருமகளுடன் சாமியாத்தாள் வசித்து வந்தார். நேற்று காலை சாமியாத்தாள் தோட்டத்துக்கு ஆடு மேய்க்க சென்றார். அங்கு வந்த வேலுசாமி, மனைவியுடன் தகராறு செய்தார். ஆத்திரத்தில் கல், கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கி, மனைவியை கொலை செய்தார். பின், தானும் விஷம் அருந்தி இறந்தார்.வெள்ளகோவில் போலீசார், இச்சம்பவத்துக்கு குடும்ப பிரச்னை தான் காரணமா என்று விசாரிக்கின்றனர்.
04-Jun-2025