உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சட்ட விரோத குழாய் அமைப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு

 சட்ட விரோத குழாய் அமைப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு

உடுமலை: மடத்துக்குளம் தாலுகா, கடத்துார் ராஜவாய்க்காலில், சட்ட விரோதமாக குழாய் அமைத்துள்ளதாக மாவட்ட கலெக்டரிடம், விவசாயி மதிவாணன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று காலை, மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். கால்வாயில், நீர் சென்று கொண்டிருந்ததால், வரும் 21ம் தேதி தண்ணீர் நிறுத்தப்படும். அதற்கு பின், குழாய் பதிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அனுமதியின்றி குழாய் அமைக்கப்பட்டிருந்தால், அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல், பிரதான ரோடுகள், ஊராட்சிக்கு சொந்தமான ரோடுகள் மற்றும் ஆறு, கால்வாய், நீர்வழித்தடங்களில் பாதிக்கும் வகையில், கடத்துார் பகுதியில் குழாய்கள் அமைத்து, பல கிலோ மீட்டர் துாரத்திற்கு பாசன நீர் கொண்டு செல்லப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, முழுமையாக இப்பகுதியில் ஆய்வு செய்து, சட்ட விரோத குழாய்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை