உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடிட்டர் கல்வி முக்கியத்துவம்; கல்லுாரியில் விழிப்புணர்வு

ஆடிட்டர் கல்வி முக்கியத்துவம்; கல்லுாரியில் விழிப்புணர்வு

திருப்பூர்; காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் சார்பில், இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.,) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்டிடியூட் முதல்வர் சுரேஷ் வரவேற்று பேசுகையில், ''பட்டய கணக்கர் படிப்பு, முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாணவ, மாணவியர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது'' என்றார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்வி ஆலோசகர்கள் செந்தில்குமார், மகேஷ், அருள் ஜோதி, எஸ்.ஐ.ஆர்.சி.,யின் திருப்பூர் கிளை தலைவர் தருண் ஆகியோர், சி.ஏ., படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விரிவாக விளக்கினர். மாணவ, மாணவியர் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொண்டனர்.காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்த் வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.காம்., (சி.எஸ்.,) துறை தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை