உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய வளைவுகளை மேம்படுத்துங்க! செஞ்சேரிமலை ரோட்டில் சிரமம்

அபாய வளைவுகளை மேம்படுத்துங்க! செஞ்சேரிமலை ரோட்டில் சிரமம்

உடுமலை; செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள, அபாய வளைவுகளை மேம்படுத்தி, விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில், 24 கி.மீ., தொலைவு, மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை வழியாக, கோவை உட்பட பகுதிகளுக்கு, அதிகளவு வாகனங்கள், இந்த ரோட்டில், செல்கின்றன.நுாற்பாலை, காற்றாலைகள் அதிகளவு இப்பகுதியில் அமைந்துள்ளதால், கனரக வாகன போக்குவரத்தும் இந்த ரோட்டில் அதிகரித்துள்ளது.ஆனால், ரோட்டிலுள்ள அபாய வளைவுகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளன.புக்குளம், வெள்ளியம்பாளையம் பிரிவு, மாலகோவில் பிரிவு, லிங்கமநாயக்கனுார் பிரிவு, சிந்திலுப்பு, கொசவம்பாளையம் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களில், இந்த ரோட்டில், அபாய வளைவுகள் உள்ளன.எதிரே வரும் வாகனங்கள், விலகிச்செல்ல முடியாத அளவுக்கு குறுகலாகவும், 'எஸ்' வளைவு போல அமைந்துள்ளதால், கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.மேலும், வளைவு பகுதிகளில், மழைக்காலங்களில், தண்ணீர் வெளியேறாமல், ரோடு சிதிலமடைந்து, மெகா குழிகள் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், நிலைதடுமாறி, விபத்துக்குள்ளாகின்றனர்.பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ள ரோடு விரிவாக்கம் மற்றும் வளைவுகள் மேம்பாட்டை உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி