உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்படுத்தப்பட்ட பி.எப்., அலுவலகம் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும்

மேம்படுத்தப்பட்ட பி.எப்., அலுவலகம் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும்

திருப்பூர்; திருப்பூர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) வட்டார ஆணையருடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்க திறன் மேம்பாடு மற்றும் சமர் திட்ட துணைக்குழு தலைவர் சக்திவேல் வரவேற்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் பேசுகையில், ''பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா, வர வேற்கத்தக்க திட்டம். இத்திட்டத்தால், 1.92 கோடி தொழிலாளர் வேலை வாய்ப்பு பெற முடியும்'' என்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், தலைமை வகித்து பேசியதாவது:திருப்பூர் பி.எப்., அலுவலகம், தற்போது வட்டார அலுவலகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் தலைமை ஆணையராக அபிேஷக் ரஞ்சன் உள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 1,400 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 45 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்கிறது. 8 லட்சம் தொழிலாளர்களை கொண்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர் பெண்கள். இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, திருப்பூர் மேலும் வளர்ச்சியடையும். பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா செயலியை பலதரப்பட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அபிேஷக் ரஞ்சன் பேசுகையில்,''திருப்பூர், அதிக தொழில் வாய்ப்புள்ள 'கிளஸ்டர்' என்பதால், மாவட்ட அலுவலகமாக இருந்து, வட்டார அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், பல தொழிலாளர்கள் பயன்பெறுவர். பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம், மிக விரைவில் அமலுக்கு வரும்,'' என்றார். உறுப்பினர் சேர்க்கை துணைக்குழு தலைவர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை