| ADDED : நவ 19, 2025 04:37 AM
தாராபுரம்: தாராபுரம், மனக்கடவை சேர்ந்தவர் ராகேஷ், 40. இவரது மனைவி சுசீலா, 35; நிறைமாத கர்ப்பிணி. நேற்று அதிகாலை, சுசீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் சென்றது. வீட்டிலிருந்து அவரை அழைத்து கொண்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். கர்ப்பிணிக்கு பணிகுடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது. உடனே, ஆம்புலன்சில் இருந்த, அவசரகால மருத்துவ நிபுணர் இளவரசு, பைலட் கவுதம் ஆகியோர் வழியிலேயே பிரசவம் பார்த்தனர். அதில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த, ஆம்புலன்ஸ் பணியாளர்களை அனைவரும் பாராட்டினர்.