ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு
- நமது நிருபர்-திருப்பூர் மாவட்டம் உருவான பின், தொழிலாளர் துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. சமூகபாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகம் மட்டும், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் அருகே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்து வந்தது. தொழிலாளர் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படுகிறது.