மேலும் செய்திகள்
தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்
20-Oct-2024
கருவலுார் எனது சொந்த ஊர்; ராணுவத்தில், ஜம்மு காஷ்மீரில் குப்வாரா, பாரமுல்லா பகுதிகளில் மட்டும் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன். எந்த நேரத்திலும் உயிர் பறிபோகலாம் என்பதே யதார்த்த நிலையாக இருந்தது. உணவு கிடைக்காது. கூலிக்கு ஒருவரைப் பணியமர்த்தி உணவு கொண்டுவருவர். ஆறு மாதத்துக்கான உணவைச் சேமிப்பாக வைத்திருப்போம். திடீரெனக் கலவரம் நடக்கும் பகுதிக்கு அனுப்பிவைப்பர்.எனக்கு மூன்று பேர் உயரதிகாரிகளாக இருந்தனர். அவர்கள் மூவரிடமும் உத்தரவு கிடைத்தவுடன், கலவரப்பகுதிக்குச் செல்வோம். கிராமங்கள் செங்குத்தான பாதையில் அமைந்திருக்கும். ஒரு குழுவுக்கு 40 பேர் இருப்பர். நான் ஒரு குழுவை வழிநடத்தினேன். இடம் மாற்றிக்கொண்டே இருப்பர். குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். எங்கிருந்து குண்டுச்சத்தம் எழுகிறது என்பது தெரியாது. தகவல் தொடர்பு மிகக் குறைவாக இருந்தது. வாக்கி-டாக்கி உயரதிகாரிகளிடம் மட்டும் இருக்கும்.கார்கில் போரின்போது திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தேன். நள்ளிரவு 2:00 மணியளவில் உத்தரவு வந்தவுடன், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் துப்பாக்கி, தோட்டாக்கள், பெட்ஷீட், இரண்டு செட் உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஆயிரம் பேர் உடனடியாகப் புறப்பட்டோம். கார்கில் போரின்போது ராஜஸ்தானில் பாக்., எல்லையோரம் புழுதிப்புயலைக் கடந்து நின்றோம். அங்கு நிற்பதே சிரமம். அது செத்துப்பிழைத்ததற்கு ஈடானது.தேசத்திற்காக, ராணுவத்தில் பணிபுரிந்தது இன்றும் பெருமையாக உள்ளது.
20-Oct-2024