வருமான வரி அலுவலகம் குமார் நகரில் அடிக்கல்
திருப்பூர், குமார் நகர் 60 அடி ரோட்டில், வருமான வரி அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்துார் தலைமை வகித்தார்.கோவை தலைமை கமிஷனர் செபாஸ்டியன், முதன்மை கமிஷனர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமார் நகரில், மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வருமான வரி அலுவலகம் மற்றும் 53 குடியிருப்புகள் கொண்ட வருமான வரித்துறை வளாகமாக கட்டப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் லட்சுமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர். இணை கமிஷனர் ஆதவன் நன்றி கூறினார்.