உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிற மாநில தக்காளி வரத்து அதிகரிப்பு; சாகுபடி பரப்பு குறைவால் மாற்றம்

பிற மாநில தக்காளி வரத்து அதிகரிப்பு; சாகுபடி பரப்பு குறைவால் மாற்றம்

உடுமலை; சாகுபடி பரப்பு குறைந்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், ஆந்திரா தக்காளியை கொள்முதல் செய்து, உடுமலையில் இருந்து கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஒவ்வொரு சீசனிலும், 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, நாள்தோறும், 14 கிலோ கொண்ட 20 ஆயிரம் பெட்டிகள் வரை தினசரி சந்தைக்கு வரத்து இருக்கும்.உடுமலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர், மூணாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால், தக்காளிக்கு முக்கிய வர்த்தக மையமாக உடுமலை உள்ளது.இந்நிலையில், நடப்பு சீசனில் பல்வேறு காரணங்களால், தக்காளி சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது; தினசரி சந்தைக்கும் வரத்து, நாள்தோறும், 500 பெட்டியாக சரிந்துள்ளது. இதனால், பிற பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், தக்காளி கொள்முதல் செய்யாமல் திரும்புவதை தவிர்க்க, புதிய நடைமுறையை பின்பற்றுகின்றனர்.ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து, 30 கிலோ கொண்ட பெட்டிகளில், தக்காளியை வாங்கி வருகின்றனர். பின்னர் உடுமலையில் இருந்து இந்த தக்காளியை, கிலோ 11 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.வழக்கமாக கோடை கால சீசனில் உடுமலை சந்தைக்கு வரத்து அதிகளவு இருக்கும். இந்தாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், வரத்தும் சரிந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ