உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

பா.ஜ., அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

பா.ஜ., அலுவலகம் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ கேப்டன் செலம்பணன் தேசியக் கொடியை ஏற்றினார். பா.ஜ.,வினர் ஏராளமானோர் பங்கேற்றனர். கவர்னர் இல்லம் மஹாராஷ்டிர கவர்னர் ராதாகிருஷ்ணன் வீடு ெஷரீப் காலனியில் உள்ளது. கவர்னரின் தாயார் ஜானகியம்மாள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர். நேற்று வீட்டின் முன் ஜானகியம்மாள், சுதந்திர தினம் முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றினார். இதில் அவர்கள் குடும்பத்தினர், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் அங்கு நேற்று காலை முதல் மாலை வரை ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் டீ, காபி ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டது. வியாபாரிகள் திருப்பூர் மாநகர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் சங்க தலைவர் தங்கமுத்து கொடி யேற்றினார். செயலாளர் மனோகரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மங்கலம் கிளை சார்பில், அலுவலகம் முன் தேசிய கொடியேற்றப்பட்டது. பொருளாளர் அஸ்கர் அலி கொடியேற்றினார். செயலாளர் முகமது ரபி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர்கள், தாஹாநசீர், ஜபருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !