மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை பகுதியிலும் விழா கோலாகலமாக நடந்தது. உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், தலைமையாசிரியர் செண்பகவல்லி, ஆசிரியர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய மாணவர் படையினர் அணிவகுப்புக்கு முன்னாள் மாணவி மகதி புல்லாங்குழல் இசைத்தார். தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் நர்மதா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். * உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் மாலா மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பங்கேற்றனர். * அமராவதிநகர் சைனிக் பள்ளியில், பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளியின் பணி சேவைக்காக பள்ளி பணியாளர்கள் அரவிந்த், பிரகாஷ் உள்ளிட்ட இருவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. * ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் ராஜேஸ்வரி கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மைக் குழு, சங்கீதா, கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் கண்ணபிரான், பங்கேற்றனர். * பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஜான்பாட்ஷா வரவேற்றார். * உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில், பஸ் ஸ்டாண்டில் கொடியேற்றப்பட்டது. பிரியா பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லுாரி, ஜனனி மருத்துவமனை, சார்பில், பொதுமருத்துவம், ரத்தப்பரிசோதனை முகாம் நடந்தது. * உடுமலை ஸ்டேட் பேங்க் வளாகத்தில் நடந்த விழாவில், வங்கி முதுநிலை மேலாளர் ராபின்சன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவத்தினர் சங்க தலைவர் ராமலிங்கம், நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் முன்னாள் ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. * உடுமலை, முதற்கிளை நுாலகத்தில் நுாலகர் பீர்பாட்சா கொடியேற்றினார். இரண்டாம் கிளை நுாலகத்தில் நடந்த விழாவில் ஆசிரியர் விஜயலட்சுமி, நுாலகர்கள் மகேந்திரன், பூரணி நுாலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். * உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்த விழாவில், அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் கொடி ஏற்றினார். * உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். பள்ளி துணைத்தலைவர் ஜெயராமன் கொடி ஏற்றினார். செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். * கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சாரதாமணிதேவி கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் சின்னராஜூ முன்னிலை வகித்தார். * பெதப்பம்பட்டி என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், சுதந்திர தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. * குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தனலட்சுமி, தலைமையாசிரியர் மாரியப்பன், ஆரா கல்வி நிறுவனம் தாளாளர் கமலக்கண்ணன் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். * உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி கொடி ஏற்றினார். கல்லுாரி மாணவ பேரவை தலைவி ஸ்ரீதர்ஷினி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி பேரவை ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல்ஜாய் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். * உடுமலை ஜோதி நகர் பகுதியில், ேஹப்பி வாக்கர்ஸ் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. சங்கத்தை சேர்ந்த வெங்கிடபதி கொடி ஏற்றினார். அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்தனர். பிரபஞ்ச அமைதி சேவா சங்க முதியவர்களும் விழாவில் பங்கேற்றனர். சங்கத்தை சேர்ந்த முத்துசாமி நன்றி தெரிவித்தார். * கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா கல்வி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். * ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் ரேணுகா வரவேற்றார். * உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் கொடி ஏற்றினார். மாணவர்களின் சுதந்திர தின விழா பேரணி நடந்தது. பேரணியில் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் பிரகாஷ் , உடற்கல்வி இயக்குனர் சண்முகராஜா, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். * உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி அறங்காவலர் குழு தலைவர் ரவி கொடி ஏற்றினார். செயல் அலுவலர் அமரநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் சுதந்திர தின பொதுவிருந்து நடந்தது.
16-Jul-2025