உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்; அக்.,25 முதல் 2025 பிப்., வரை நடக்கிறது

கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்; அக்.,25 முதல் 2025 பிப்., வரை நடக்கிறது

உடுமலை : கால்நடைத்துறை சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி, கடந்த, 25ம் தேதி துவங்கியது. இப்பணி வரும், 2025 பிப்., வரை நடக்க உள்ளது.இந்திய அளவில், கால்நடை கணக்கெடுப்பு பணி, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. கடந்த, 2019ல், 20வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்தது.தற்போது, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி, கடந்த, 25ல் துவங்கியது. வரும், 2025 பிப்., வரை இப்பணி நடக்கும்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராமம் வாரியாகவும் மற்றும் நகர்ப்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடை கணக்கெடுப்புப்பணி நடக்கிறது.இதில், கால்நடைகள் உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் கோசாலைகளில் உள்ள கால்நடைகளின் தகவல்கள் சேகரிக்கப்படும்.இப்பணியை மேற்கொள்ள, மாவட்டத்தில், 236 கணக்கெடுப்பாளர்கள், 5 பேருக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம், 47 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கால்நடை கணக்கெடுப்பு பணிக்காக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவது குறித்து, கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இக்கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வித்தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.எனவே, வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளி விபர அலுவலர்களிடம் தக்க ஒத்துழைப்பு அளித்து கால்நடைகள் குறித்த உரிய விபரங்களையும் வழங்குமாறு, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை