கூடுதல் போனஸ் வழங்க ஐ.என்.டி.யு.சி., வலியுறுத்தல்
திருப்பூர்: ஐ.என்.டி.யு.சி., திருப்பூர் பனியன் தொழிலாளர் மாநாடு, திருப்பூர், காவேரியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பொருளாளர் கோபால்சாமி வரவேற்றார். பனியன் சங்க தலைவர் பெருமாள், செயலாளர் சிவசாமி முன்னிலை வகித்தனர்.தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாநகர துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.பாண்டியன்நகர் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; பனியன் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; தீபாவளிக்கு இரண்டு வாரம் மட்டுமே உள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதலாக போனஸ் வழங்கிட வேண்டும். சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.