உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

திருப்பூர்,;திருப்பூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோவை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள, 24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், காங்கயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மூலனுாருக்கும் மாற்றப்பட்டு, அங்கு கோவையில் இருந்து செல்வநாயகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடத்துார் செந்தில்குமார், திருப்பூர் மாவட்டத்துக்கும், ஈரோட்டில் இருந்து திருஞானசம்பந்தம், குடிமங்கலத்துக்கும், அங்கிருந்த கீதா, புளியம்பட்டிக்கும், ஈரோட்டில் இருந்து ராஜா பிரபு, அவிநாசிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளகோவிலில் இருந்த எஸ்.ஐ., முத்துக்குமார், அவிநாசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை