கொழுமம் ரோடு சந்திப்பில் சென்டர் மீடியன் அமையுங்க
உடுமலை; கொழுமம் ரோடு சந்திப்பில் விபத்துகளை தவிர்க்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.உடுமலை நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொழுமம் ரோடு பிரிகிறது. தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்ட போது, கொழுமம் ரோடு பள்ளமாக மாறியது. இதனால் சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு பகுதியில் சிறிய ரவுண்டானா அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகத்தை குறைக்க, பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், பழநி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில் சேரும் போது, கொழுமம் ரோட்டில் திரும்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதிவேக வாகனங்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு பகுதியில், குறிப்பிட்ட தூரத்துக்கு சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.