உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளதால், நேற்று பாலாலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், சபரிமலை தாந்திரீக முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், அய்யப்ப பக்த ஜனசங்கம் ஆகியன சார்பில், கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சபரிமலையில் இருப்பது போல், அய்யப்ப சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அருகில், கணபதி, முருகர், பத்ரகாளியம்மன், மாளிகைப்புரத்தம்மன், கைலாசநாதர், நவக்கிரஹம், ஸ்ரீகிருஷ்ணர் சன்னதிகள் அமைக்கப்பட்டு, வழிபாடு நடந்து வருகிறது.இந்நிலையில், கோவில் திருப்பணி செய்து, ஜூலை 2ல் கும்பாபிேஷக விழா நடத்த கோவில் நிர்வாகக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன்படி, நேற்று, பாலாலய நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை பிரதம தந்திரி மோகனரு தலைமையிலான தந்திரிகள், பாலாலய பிரதிஷ்டை பூஜைகளை மேற்கொண்டனர்.அய்யப்ப சுவாமி மூலவர், கொடிமரம் அருகே அமைக்கப்பட்டுள்ள பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, நித்ய பூஜைகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை