உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காப்பீடு திட்டம் ஓராண்டாக முடக்கம்: பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் சிக்கல்

காப்பீடு திட்டம் ஓராண்டாக முடக்கம்: பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் சிக்கல்

உடுமலை: பட்டு வளர்ச்சி துறை சார்பில், பட்டுக்கூடு உற்பத்தி தொழில் மற்றும் விவசாயிகளுக்கான காப்பீடு திட்டம் நிறைவடைந்து, ஒரு ஆண்டாகியும் மீண்டும் காப்பீடு செய்யாததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், பழநி, பல்லடம், பொள்ளாச்சி பகுதியில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில பட்டு வளர்ச்சி துறை சார்பில், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பயன்பெறும், பட்டு புழு வளர்ப்பு மனைகளுக்கு, விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த, 20 ஆண்டுகளாக தமிழக அரசே, முழுமையான பிரீமியம் தொகை செலுத்தி, விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. இன்சூரன்ஸ் திட்டத்தில், விவசாயிகள் பங்களிப்பு தொகை செலுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வறட்சி, கனமழை, முட்டை, பால்புழுக்கள் பாதிப்பு, விபத்து என பல்வேறு பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்சூரன்ஸ் செய்ததிற்கான காலக்கொடு, கடந்த ஆண்டு, செப்., மாதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஒரு ஆண்டாக பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்தாமல், இழுத்தடித்து வருகின்றனர். பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது: ஆண்டு தோறும், பட்டு வளர்ச்சி துறை சார்பில், விவசாயிகள், பட்டு புழு வளர்ப்பு மனைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வந்தது. புழு வளர்ப்பு மனை விபத்தால் சேதமடைதல், ஏதாவது காரணத்தினால் புழு வளர்ப்பு தோல்வியடைந்தாலும், விவசாயிகளுக்கும் விபத்து ஏற்பட்டால், என இழப்பீடு கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு ஆண்டாக திட்டத்தை அரசு முடக்கியுள்ளது. விவசாயிகள் நேரடியாகவும் காப்பீடு செய்ய முடியாது. இதனால், பட்டுப்புழு வளப்பில் ஏதாவது பாதிப்பு, விபத்து ஏற்பட்டால், உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கான காப்பீடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், பாதிப்புகளுக்கு ஏற்ப உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை