பனியன் நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் கருத்தரங்கு
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.இது குறித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கோவை மண்டல தலைமை மேலாளர் சந்தீப் கூறியதாவது:நாளை (இன்று) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் சேர்ந்து இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்துகிறோம். ஆடை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஏற்படும் விபத்துகளும், அதற்கான இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடல் செய்கிறோம். சமீபத்தில், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் ஆவணங்களை சமர்ப்பித்து, 30 நாட்களுக்குள், 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, தீ விபத்து காப்பீடு பணத்தை வழங்கியுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களின் சிரமமான நேரங்களில், நாங்கள் பக்க பலமாக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.