உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆமணக்கு சாகுபடிக்கு ஆர்வம் மானிய விதைக்கு எதிர்பார்ப்பு

ஆமணக்கு சாகுபடிக்கு ஆர்வம் மானிய விதைக்கு எதிர்பார்ப்பு

உடுமலை: 'ஆமணக்கு சாகுபடியில், ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆராய்ச்சி நிலையத்தின் விதைகளை, வேளாண்துறை வாயிலாக கிடைக்க செய்ய வேண்டும்,' என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. தற்போது, சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு உட்பட எண்ணெய் வித்துகளுக்கு, அதிக தேவை ஏற்பட்டுள்ளது.இதனால், இவ்வகை சாகுபடிகளில், விவசாயிகளுக்கு, நல்ல வருவாயும் கிடைத்து வருகிறது. எனவே, பிற மாவட்ட விவசாயிகளை பின்பற்றி, எண்ணெய் வித்து சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதியில், ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், சாகுபடிக்கு தேவையான விதைகள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: பருத்தி, சின்னவெங்காயம் உட்பட சாகுபடியில், வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிட்டு வருகிறோம். இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பில், ஆமணக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, வரப்பில் மட்டுமல்லாது, தனிப்பயிராகவும் சாகுபடி செய்ய ஆர்வமுள்ளது.இந்நிலையில், தற்போது, ஆமணக்கு சாகுபடிக்கு, தனியாரிடமே விதைகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சேலத்தில், அரசின், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சார்பில், பல ரக ஆமணக்கு விதைகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய விதைகளை வேளாண்துறை வாயிலாக, மானிய விலையில் வினியோகித்தால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ