உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்

உலர் தீவனம் இருப்பு வைக்க ஆர்வம்

உடுமலை; உலர் தீவன தேவைக்காக, மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டை வாங்கி இருப்பு வைக்க, கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, மாடுகள் அதிகளவு பராமரிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்து மாடுகளுக்கு வழங்குகின்றனர். மேலும், உலர் தீவனமும் குறிப்பிட்ட சதவீதம் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.வைக்கோல், மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டு அதிகளவு உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.எனவே, வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாக சோளம் மற்றும் மக்காச்சோளம் விதைப்பு செய்வார்கள். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால், வழக்கத்தை விட, மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டது.தற்போது, மானாவாரி சாகுபடி அறுவடை துவங்கியுள்ளது. இந்த சீசனில், உலர் தீவன தேவைக்காக மக்காச்சோள தட்டுகளை வாங்கி இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகளுக்கு வழங்கப்படும் புண்ணாக்கு, மக்காச்சோள மாவு ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. உலர் தீவனம் மட்டுமே பால் உற்பத்தி குறையாமல், இருக்க பயன்படுகிறது. நெல் சாகுபடியில் அறுவடை துவங்காததால், வைக்கோல் வரத்து குறைவாகவே உள்ளது. தற்போது மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டை வாங்கி இருப்பு வைக்கிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !