உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வம்

வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வம்

பல்லடம்: திருப்பூர் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிமேகலை வரவேற்றார். அமைச்சர் சாமிநாதன், நகராட்சி கமிஷனர் மனோகரன், நகராட்சி தலைவர் கவிதாமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் பணியாளர் தேர்வு நடந்தது.இதில், 250க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பணி ஆணையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி