உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச சதுரங்க போட்டி; பிரன்ட்லைன் மாணவி அசத்தல்

சர்வதேச சதுரங்க போட்டி; பிரன்ட்லைன் மாணவி அசத்தல்

திருப்பூர்;சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில், திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கரூர் ஸ்மார்ட் செஸ் அகாடமி சார்பில், கரூர் அரசு மகளிர் கல்லுாரியில், இரண்டாவது இன்டர் நேஷனல் ரேபிட் சதுரங்க ரேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 590 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 வயது மாணவியர் பிரிவில், திருப்பூர் பிரன்ட்லைன் நியூஜென் இன்டர்நேசனல் பள்ளி மாணவி சிரோஸ்ரீ நந்தன், 9 சுற்றுகளில் 6 சுற்று வெற்றியுடன் முதலிடம் பெற்று, கோப்பையை வென்றார். சதுரங்கத்தில் சாதித்த சிரோஸ்ரீ நந்தனை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் சியாமளா தேவி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !