உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிக்கு மிரட்டல்; இருவர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல்; இருவர் மீது வழக்கு

திருப்பூர்; அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுப்பது குறித்து புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், ஊதியூர், ஆறுதொழுவு, காலிபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி, 53; விவசாயி. தங்கள் கிராம பகுதியில் பாப்பினி கிராமத்தில் ராஜேஷ், 45 என்பவருக்கு நிலம் உள்ளது.இந்த இடத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், இரவு நேரங்களில் டிப்பர் லாரிகள் மண் அள்ள வேகமாக சென்று, கால்நடைகள் மற்றும் ரோட்டோரத்தில் உள்ள பொருட்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.இதுதொடர்பாக, விவசாயி வேலுசாமி ஊதியூர் போலீசில் புகார் அளித்தார். இதையறிந்த, ராஜேஷ் மற்றும் செல்வராஜ், 40 ஆகியோர் வேலுசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், இருவர் மீதும் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை