உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய  அதிநவீன தையல் மெஷின் அறிமுகம்

 ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய  அதிநவீன தையல் மெஷின் அறிமுகம்

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்காக, 'சிருபா' மற்றும் மேகலா நிறுவனங்கள் சார்பில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ஏஐ' தையல் மெஷின்கள் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'சிருபா நிறுவனம், தைவானின் 'டாப் - 100' நிறுவனங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. 'சிருபா' தைவான் மற்றும் மேகலா நிறுவனங்கள் இணைந்து, மேகலாவின் 50வது பொன்விழாவை கொண்டாடும் வகையில், 'ஏஐ' தொழில்நுட்பத்துடன் கூடிய தையல் இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளனர். தற்போதைய ஆடை உற்பத்தியாளர்களின் கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக, 'சிருபா' மற்றும் மேகலா இணைந்து, தங்களது 60 ஆண்டுகால அனுபவத்தின் வாயிலாக, அனைத்து வகையான ஆடை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் தற்போதைய, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ஏஐ' மெஷின்களை மிகக்குறைந்த விலையில் அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா, திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள மேகலா டவர்ஸில் நேற்று நடந்தது. நேற்று துவங்கி, புதிய வகை தையல் இயந்திரங்கள், 21ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படுகிறது. விழாவில் 'ஆட்டோமேட்டிக்' கைநுால் கோர்க்கும் மெஷின், 'நெக்ரிப் அட்டாச் மெஷின்', சிங்கர் மெஷின் மற்றும் பேட்லாக் (UT) மெஷின்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வகை எக்னாமிக் மெஷின்கள், 20 முதல் 25 சதவீதம் வரையிலான சிறப்பு சலுகை விலையில் விற்பனைக்கு உள்ளன; பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். தற்போதைய சிறப்பு சலுகை விற்பனையில், குறிப்பிட்ட அளவு மெஷின்கள் மட்டுமே உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தில் உருவான மெஷின்களை வாங்கி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, 97877 11880 மற்றும் 93644 -92880 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மேகலா நிறுவனத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ