உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 

நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 

திருப்பூர்: டிசெட் நடத்தும், 30வது நிட்சிட்டி வாலிபால் போட்டியில், ஆர்வமுள்ள அணிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசெட் அமைப்பு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) சார்பில், 30வது நிட்சிட்டி வாலிபால் போட்டி நவ. 29 மற்றும் 30 இருநாட்கள் சிறுபூலுவப்பட்டி, டிசெட் மைதானத்தில் நடக்கிறது; போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் எதுவுமில்லை. 17, 19 என இரு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்கு நாக்--அவுட் முறையில் போட்டி நடக்கும். நுழைவுப் படிவம் அனைத்துப் பள்ளி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 96554 78132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை