மேலும் செய்திகள்
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
19-Apr-2025
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் மாநிலம் முழுதும், 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால் மற்றும் மாணவர்களுக்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு அடிப்படையில் மாணவ, மாணவியர் இணையலாம். விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம், 21ம் தேதி முதல், www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.விருப்பமுள்ள, 7,8,9 மற்றும், 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அடுத்த மாதம், 5ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட வேண்டும்.அடுத்த மாதம், 7ம் தேதி, காலை, 7:00 மணிக்கு சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில், மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் துவங்கவுள்ளது. அன்றயை தினம் மாணவர்களுக்கும்; 8ம் தேதி மாணவியருக்கும் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு: 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
19-Apr-2025