உலர்களங்களை சீரமைத்து தாங்க! பாசன சபையினர் மனு
உடுமலை: அறுவடை துவங்கும் முன், உலர்களங்களை சீரமைத்து தர வேண்டும் என ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், குறை தீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், கொடுத்த மனு:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடையின் போது மக்காச்சோளத்தை காய வைக்க உலர்களங்கள் தேவை.இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம், அடிவள்ளி கிராமங்களிலுள்ள நான்கு உலர்களங்களும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.உலர்களங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். சாகுபடி பரப்புக்கேற்ப புதிதாக உலர்களங்கள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.