உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாயில் இடிந்து விழும் கரை; பாசன விவசாயிகள் வேதனை

கால்வாயில் இடிந்து விழும் கரை; பாசன விவசாயிகள் வேதனை

உடுமலை; பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், நான்கு மண்டலத்திலும், 59,068 ஏக்கர் நிலங்கள் உடுமலை கால்வாய் வாயிலாக பாசன வசதி பெற்று வருகின்றன.வினாடிக்கு, 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் வகையில், 30 கி.மீ., தொலைவுக்கு இந்த கால்வாய் கட்டப்பட்டது.பயன்பாட்டுக்கு வந்து நீண்ட காலமாகியும் இக்கால்வாய் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், பல இடங்களில் கரைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன.கரையிலுள்ள கற்கள் சரிந்து படிப்படியாக கரையே சரிந்து வருகிறது. இப்பிரச்னையால், முழு கொள்ளளவில், கால்வாயில் தண்ணீர் திறக்க முடிவதில்லை; கடைமடைக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.எனவே ஒவ்வொரு மண்டல பாசன இடைவெளியின் போதும், கால்வாயில் குறிப்பிட்ட துாரம் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் திறப்புக்கு முன் பெயரளவுக்கு பராமரிப்பு பணிகள் மட்டும் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். கரை முற்றிலுமாக வலுவிழந்து, கால்வாய் உடையும் முன் அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி