| ADDED : நவ 27, 2025 05:18 AM
பொங்கலுார்:கொடுவாய் வழியாக செல்லும் பி.ஏ.பி., வாய்க்கால் குண்டடம் ஒன்றிய பகுதிக்குள் நுழைகிறது. கொடுவாய் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு சென்று பி.ஏ.பி. வாய்க்காலில் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு மலைபோல் குவிக்கப்படும் குப்பைகளால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லை. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றவே விவசாயிகள் போராட வேண்டி உள்ளது. தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள் தண்ணீருடன் விவசாய நிலத்திற்குள் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், மண்வளம், நீர் வளம் கெட்டு மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது, பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பி.ஏ.பி., வாய்க்காலில் குப்பை கொட்டும் நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்னர்.