உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்வழிப்பாதையா? குப்பைத்தொட்டியா?

நீர்வழிப்பாதையா? குப்பைத்தொட்டியா?

கால்வாய் அவலம் கரைப்புதுார் ஊராட்சி, பாரியூர் அம்மன் நகர், வாய்க்கால்மேடு ஸ்டாப் அருகே பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுத்தம் செய்ய வேண்டும். – முத்துகுமாரசாமி, வாய்க்கால்மேடு. (படம் உண்டு) குப்பை குவிப்பு திருப்பூர், தாராபுரம் ரோடு, செரங்காடு – எம்.ஜி.பி., தியேட்டர் ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அகற்ற வேண்டும். – ஈஸ்வரமூர்த்தி, செரங்காடு. (படம் உண்டு) சுகாதாரக்கேடு கணியாம்பூண்டி, ராம் நகரில் சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. – விஜயன் அண்ணாமலை, கணியாம்பூண்டி. (படம் உண்டு) ஓடையில் குப்பை திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டு, பிரியங்கா நகர் நீர்வழிப்பாதை ஓடையில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. தடுக்க நடவடிக்கை தேவை. – பழனிசாமி, பிரியங்கா நகர். (படம் உண்டு) சாலை எப்போது சந்திராபுரம், பண்ணாரி மாரியம்மன் நகரில் பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டு ஐந்து மாதங்களாகியும் பணி முடிந்து சாலை சீரமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்களுடன் சாலை கிடக்கிறது. – ராமச்சந்திரன், சந்திராபுரம். (படம் உண்டு) கேமரா பழுது அவிநாசி – மேட்டுப்பாளையம் சாலை, கருவலுாரில் பொருத்தப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளன. சீரமைக்க வேண்டும். – செந்தில்குமார், கருவலுார். (படம் உண்டு) மின்விபத்து அபாயம் பொங்குபாளையம் ஊராட்சி, கிருஷ்ணா நகரில் தண்ணீர் தொட்டிக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாகவும், சாய்ந்த நிலையிலும் உள்ளன. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும். – நாகராஜ், கிருஷ்ணா நகர். (படம் உண்டு) குப்பைக்கு தீ பல்லடம், செட்டிபாளையம், சர்ச் வீதியில் குப்பையை அகற்றாமல் நகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. – பால்ராஜ், செட்டிபாளையம். (படம் உண்டு) நாய்கள் தொல்லை பெருந்தொழுவு – அலகுமலை ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும். – ரமேஷ், அலகுமலை. (படம் உண்டு) ரியாக் ஷன் தெருவிளக்கு எரிகிறது திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், டி.கே.டி., மில் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்திருப்பது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து விளக்கு சீரமைக்கப்பட்டு தற்போது எரிகிறது. – சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ