உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை சாத்தியமாகுமா?

துாய்மை சாத்தியமாகுமா?

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஒரு புறம் நடந்தாலும், துாய்மையாக வைக்கும் பணி சவாலாக உள்ளது.நான்கு இடங்களில் கட்டணக் கழிப்பிடம் உள்ள போது, திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, மறைவான இடங்களில் அசுத்தம் செய்வது தொடர் கதையாக உள்ளது. எச்சில் துப்பும் செயல்களும் நடக்கிறது.புகைபிடிக்கவும் செய்கின்றனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் தற்போது, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'ரயில்வே பகுதியில் சிறுநீர் கழித்தல், புகை பிடித்தல், எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல் அல்லது கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றுக்கு, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,' எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி